/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தற்கொலைக்கு முயன்ற தந்தையும் பலி
/
தற்கொலைக்கு முயன்ற தந்தையும் பலி
ADDED : அக் 12, 2025 04:40 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே பாப்பாகுடியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 10 மாத பெண் குழந்தைக்கு பூச்சி மருந்துகொடுத்த தந்தை தற்கொலைக்கு முயன்ற நிலையில் அக்.8ல் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்த நிலையில் நேற்று தந்தையும் இறந்தார்.
பாப்பாக்குடியைச் சேர்ந்த கண்ணன் மகன் பம்பையன் 28. இவருக்கும் சாலுாரைச் சேர்ந்த சுமதிக்கும் 24, ஆறுஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் மகன், 10 மாதத்தில் மகள் உள்ளனர். கணவன்மனைவிக்கு இடையே பிரச்னை இருந்தது. இதில் கோபமடைந்த சுமதி 10 மாத பெண்குழந்தையுடன் கொலுஞ்சிப்பட்டியில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றார். அக்.7 காலை 10:00 மணிக்குகொலுஞ்சிப்பட்டிக்கு சென்ற பம்பையன் மனைவியிடம் இருந்து குழந்தையை பெற்றுக் கொண்டு பாப்பாகுடியில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு வந்தார். அங்கு குழந்தைக்கு பூச்சி மருந்தை கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்குமுயன்றார்.
இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த 10 மாத பெண் குழந்தை அக்.8 இறந்தது. சிகிச்சையில் இருந்த தந்தை பம்பையனும் நேற்று இறந்தார்.