ADDED : அக் 12, 2025 04:54 AM
தேவகோட்டை : தேவகோட்டை கந்த சஷ்டி கழகத்தின் 80 வதுஆண்டு விழா முருகவேள் சதுக்கத்தில் அக். 21ல் தலைவர் அருணாசலம் தலைமையில் துவங்கி 9 நாட்கள் இயல் இசை நாடக எனும் முத்தமிழ் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.
முதல் நாள் மத்திய அரசின் துறைமுகம், மற்றும் நீர்வழித்துறை இணை செயலாளர் லட்சுமணன் தொடங்கி வைக்கிறார். கோவிலுார் ஆதினம் நாராயண ஞான தேசிகர் ஆசியுரை வழங்குகிறார்.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் பரிசு வழங்குகிறார். மருத்துவ பேராசிரியர் மோகன், ஆன்மிக எழுத்தாளர் இலக்கியமேகம் சீனிவாசன் பேசுகின்றனர். எட்டு நாள் நிகழ்ச்சிகளில் ஆன்மிக உரை, சிந்தனை அரங்கம், பட்டிமன்றம் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழாகழக தலைவர் அருணாசலம், செயலர் மீனாட்சி சுந்தரம், இணை செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் முத்தையன் செய்து வருகின்றனர்.