/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி பழைய மருத்துவமனை வளாகத்தில் முட்புதர்களால் அச்சம்
/
காரைக்குடி பழைய மருத்துவமனை வளாகத்தில் முட்புதர்களால் அச்சம்
காரைக்குடி பழைய மருத்துவமனை வளாகத்தில் முட்புதர்களால் அச்சம்
காரைக்குடி பழைய மருத்துவமனை வளாகத்தில் முட்புதர்களால் அச்சம்
ADDED : ஆக 25, 2025 05:53 AM

காரைக்குடி : காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை கட்டடங்கள் பயன்பாடின்றி கருவேல மரங்கள் சூழ்ந்து வீணாகி வருகிறது.
காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது.
இங்கு உள், வெளி நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, அவசர சிகிச்சை, ரத்த வங்கி என பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வந்தன. இதன் மூலம் காளவாய் பொட்டல், ரயில்வே ரோடு, அரியக்குடி, கணேசபுரம், இடையர் தெரு உட்பட காரைக்குடியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், சூரக்குடியில் புதிய கட்டடத்தில் அரசு மருத்துவமனை மாற்றப்பட்டது.
இதனால் பழைய மருத்துவமனையில் பிரசவ வார்டு மற்றும் புறநோயாளி பிரிவுடன் மருத்துவமனை செயல்பட்டது. தற்போது, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை, ரத்த வங்கி, சி.டி., ஸ்கேன், காப்பீட்டு திட்டம், டயாலிசிஸ், காது மூக்கு தொண்டை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் புதிய கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பழைய அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மட்டுமே செயல்படுகிறது. இங்குள்ள பழைய மருத்துவமனை கட்டடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்து, முட்புதர்களாக காட்சி அளிக்கின்றன.