ADDED : ஜூலை 03, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் டிப்பர் லாரிகளில் மணல், கல் ஓவர் லோடு ஆக எடுத்துச் செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கட்டுமான பணிகளுக்கு டிப்பர் லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் மணல் கொண்டு செல்லப்படுகிறது. சில லாரிகளில் டிப்பரின் மேல்மட்டத்தை விட இரண்டு அடி வரை கூடுதலாக கல், மணல் குவித்து வைத்துக் கொண்டுசெல்லப்படுகிறது. வேகத்தடை, சாலையோர பள்ளங்களில் லாரி ஏறி இறங்கும் போது கல், மணல் ரோட்டோரத்தில் சரிந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். விதிகளை மீறி ஓவர் லோடு கல், மணலுடன் செல்லும் டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.