/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருட்டு அச்சத்தில் உரத்துப்பட்டி மக்கள் எஸ்.பி.,யிடம் புகார்
/
திருட்டு அச்சத்தில் உரத்துப்பட்டி மக்கள் எஸ்.பி.,யிடம் புகார்
திருட்டு அச்சத்தில் உரத்துப்பட்டி மக்கள் எஸ்.பி.,யிடம் புகார்
திருட்டு அச்சத்தில் உரத்துப்பட்டி மக்கள் எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : செப் 30, 2025 04:10 AM
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே உரத்துப்பட்டி கிராமத்தில் அடிக்கடி தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அச்சமாக இருப்பதாகவும், கொள்ளையர்களை பிடிக்க கோரி கிராம மக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது உரத்துப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.கிராமத்தில் உள்ள 8 வீடுகளில் 30 பவுன் தங்க நகைகள், பித்தளை பொருட்கள், வெள்ளி பொருட்கள் கொள்ளை போயுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். கிராமத்தில் தொடர்ச்சியாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தவர்களை விரைவில் கைது செய்து பொருட்களை மீட்டுக் கொடுக்கவும், கிராமத்திற்கு இரவு ரோந்து போலீசாரை அதிகப்படுத்தவும் கோரி எஸ்.பி., அலுவலகத்தில் உரத்துப்பட்டி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.