/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீட்டை உடைத்து 56 பவுன் நகை கொள்ளை 15 நாட்களில் 6 வீடுகளில் தொடர்வதால் அச்சம்
/
வீட்டை உடைத்து 56 பவுன் நகை கொள்ளை 15 நாட்களில் 6 வீடுகளில் தொடர்வதால் அச்சம்
வீட்டை உடைத்து 56 பவுன் நகை கொள்ளை 15 நாட்களில் 6 வீடுகளில் தொடர்வதால் அச்சம்
வீட்டை உடைத்து 56 பவுன் நகை கொள்ளை 15 நாட்களில் 6 வீடுகளில் தொடர்வதால் அச்சம்
ADDED : நவ 21, 2024 02:02 AM
காரைக்குடி:காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்துார் கருவியப்பட்டியை சேர்ந்தவர் சேதுராமன் 70. குடும்பத்தினருடன் கோவையில் வசித்து வருகிறார்.
அங்கு, நகைக்கடை, அடகு கடை நடத்தி வருகிறார். கருவியப்பட்டியில் உள்ள இவரது வீடு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் சேதுராமன் மற்றும் பள்ளத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சேதுராமன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 56 பவுன் தங்க நகை திருடு போனது தெரிய வந்தது. வீட்டில் இருந்த வெள்ளிப் பொருட்கள்,பணம் திருடப்படவில்லை. சேதுராமன் மகன் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் கைரேகை சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காரைக்குடி முத்துப்பட்டினம் அய்யனார் சன்னதி தெருவை சேர்ந்த நாகப்பன் 74, என்பவரது வீடு மற்றும் செட்டிநாடு அருகே உள்ள தேவரிப்பட்டியை சேர்ந்த முத்து கருப்பன் என்பவரது வீட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.
தவிர,முத்துப் கருப்பனின் எதிரே உள்ள சாத்தப்பன் என்பவரது வீட்டிலும் திருட்டு நடந்தது.
நவ.18 ஒரே நாளில், கழனிவாசல் நேதாஜி கார்டன் பகுதியைச் சேர்ந்த பால ஜெகதீசன் 56,சிவானந்தா நகரைச் சேர்ந்த கபிலரசன் 30,ஆகியோரது வீட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டன.
தொடர் திருட்டு நடந்து வரும் நிலையில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காரைக்குடி போலீசார் திணறி வருகின்றனர்.