/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டிக்குளத்தில் சாக்கடை கால்வாய் இல்லாததால் அச்சம்
/
கட்டிக்குளத்தில் சாக்கடை கால்வாய் இல்லாததால் அச்சம்
கட்டிக்குளத்தில் சாக்கடை கால்வாய் இல்லாததால் அச்சம்
கட்டிக்குளத்தில் சாக்கடை கால்வாய் இல்லாததால் அச்சம்
ADDED : ஆக 18, 2025 11:23 PM
சிவகங்கை : மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் கிராமத்தில் 3 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். 15 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
இங்குள்ள வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் வசதி இல்லை. தெருக் களிலேயே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது.
இக்கழிவுநீரில் இனப் பெருக்கம் செய்யும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் இக்கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்புள்ளது.
வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் தெருக்களில் தேங்காமல், தடையின்றி கடந்து செல்ல ஏதுவாக, தெருக்களில் சாக்கடை கால்வாய் வசதி கட்டித்தர வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் தண்ணீர் வசதி கோமாளி பட்டி நடு நிலைப்பள்ளியில் 165 குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் தண்ணீர் வசதி இல்லை. மூன்று மாதத்திற்கு முன் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பள்ளியில் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த கிராமத்தில் ரேஷன் கடை இல்லாத தால் கடை ஏற்படுத்த வேண்டும் என கலெக் டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.