/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மேம்பாலத்தில் விதிமீறி வைக்கப்பட்ட தடுப்புகளால் அச்சம்
/
சிவகங்கை மேம்பாலத்தில் விதிமீறி வைக்கப்பட்ட தடுப்புகளால் அச்சம்
சிவகங்கை மேம்பாலத்தில் விதிமீறி வைக்கப்பட்ட தடுப்புகளால் அச்சம்
சிவகங்கை மேம்பாலத்தில் விதிமீறி வைக்கப்பட்ட தடுப்புகளால் அச்சம்
ADDED : செப் 29, 2025 06:43 AM
சிவகங்கை : சிவகங்கையில், மதுரை --- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் விதிகளை மீறி தடுப்புகளை வைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் கண்டிப்பாக தடுப்புகள் (பேரிகார்டு) அமைக்க கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், சிவகங்கையில் விதிகளை காற்றில் பறக்கவிட்டு, போக்குவரத்து போலீசார் பாலத்தின் இரு நுழைவு வாயிலிலும் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் விபத்துக்கள் நேரிடும் நிலை உள்ளது. குறிப்பாக பாலத்தின் இரு புறங்களிலும் சர்வீஸ் ரோடு அமைத்துள்ளனர். அந்த ரோட்டில் வருபவர்கள் முறைப்படி பாலத்தை நோக்கி செல்லாமல், உடனுக்குடன் பாலத்தின் நுழைவு வாயிலுக்கு செல்வதால் மெயின் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அதே போன்று பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்களும் எந்தவித விதிகளையும் பின்பற்றாததால் ரோட்டை கடக்கின்றன. இதனால் பெரிய விபத்துக்கள் நேரிடும் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக விதிப்படி தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி பாலத்தின் இரு நுழைவு வாயிலில் வைத்துள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்.