ADDED : பிப் 16, 2025 06:52 AM
சிவகங்கை : தமிழகத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி பிப்.25ல் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகசிவகங்கை மாவட்ட செயலாளர் அன்பரசு பிரபாகர் தெரிவித்தார்
அவர் கூறுகையில், தமிழக முதல்வர் தேர்தல்வாக்குறுதியில் கூறியபடி பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவில் இழைக்கபட்ட பாதிப்புகளை களைந்து மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இல்லையெனில் முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.
அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கிட வேண்டும். தமிழக அரசு நிறுத்திவைத்துள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, 21 மாத அகவிலைப்படியை ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம்முழுவதும் பிப்.25 ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

