/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அமைச்சரின் கேள்வியால் அதிர்ந்த பெண் பயனாளி
/
அமைச்சரின் கேள்வியால் அதிர்ந்த பெண் பயனாளி
ADDED : ஆக 20, 2025 06:52 AM
காரைக்குடி : அமராவதிப்புதுாரில் நடந்த வேளாண் கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த பெண் பயனாளியிடம் என்ன நலத்திட்ட உதவி பெறுகிறீர்கள் என்று அமைச்சர் பெரியகருப்பன் கேட்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அந்த பெண் விழித்ததால் அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
காரைக்குடி அமராவதிப்புதுார் அருகே உள்ள கிராமிய பயிற்சி மையத்தில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சி நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமையேற்றார்.
மாங்குடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரிய கருப்பன் 24 விவசாயிகளுக்கு ரூ. 25 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டது. வேளாண் இணை இயக்குனர் சுந்தர மகாலிங்கம் வரவேற்றார். உழவர் பயிற்சி நிலைய அதிகாரி சண்முக ஜெயந்தி நன்றி கூறினார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய போது பெண் பயனாளி ஒருவரிடம் அமைச்சர் பெரிய கருப்பன் நீங்கள் எந்த திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி பெறுகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் பெண் பயனாளி விழித்தபடி நின்றார். அருகில் இருந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட மானியம் என்று கூறினர்.
பயனாளிகளுக்கு எந்தத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது என்று கூறி, அழைத்து வாருங்கள் என கண்டித்தார்.