/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழே விழுந்த பெண் எஸ்.எஸ்.ஐ., கண்டுகொள்ளாமல் புறப்பட்ட வாகனம்
/
கீழே விழுந்த பெண் எஸ்.எஸ்.ஐ., கண்டுகொள்ளாமல் புறப்பட்ட வாகனம்
கீழே விழுந்த பெண் எஸ்.எஸ்.ஐ., கண்டுகொள்ளாமல் புறப்பட்ட வாகனம்
கீழே விழுந்த பெண் எஸ்.எஸ்.ஐ., கண்டுகொள்ளாமல் புறப்பட்ட வாகனம்
ADDED : ஜன 23, 2025 04:13 AM
காரைக்குடி: காரைக்குடியில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பெண் எஸ்.எஸ்.ஐ.,யை கண்டுகொள்ளாமல் போலீஸ் வேன் கிளம்பியதால் காயத்தை பொருட்படுத்தாமல் அந்த எஸ். எஸ்.ஐ., வேனை துரத்தி ஏறினார்.
காரைக்குடியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.நேற்று காலை சிவகங்கை புறப்பட்டார். பாதுகாப்பு பணிக்காக காரைக்குடி போலீசார் வேனில் சிவகங்கை சென்றனர்.
அப்போது வேனில் ஏற பெண் எஸ்,எஸ்.ஐ., ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தார். வேன் புறப்பட்டதால் பதட்டத்தில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த அவரை வேனில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. மகளிர் ஸ்டேஷனிலிருந்து ஓடி வந்த பெண் போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை துாக்கி விட்டனர்.
அவர் கீழே விழுந்ததையும் பொருட்படுத்தாமல் போலீஸ் வேன் கிளம்பியது. காயத்தை பொருட்படுத்தாமல் எழுந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக துரத்தி சென்று அந்த வேனில் ஏறி பாதுகாப்பு பணிக்கு சென்றார்.
மக்களின் நண்பன் போலீசார் என்று கூறும் நிலையில், சக போலீசார் கீழே விழுந்ததை கூட கண்டுகொள்ளாமல் கிளம்பிச் சென்றது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.