நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே நயினார்பேட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கான வேளாண் திட்டங்கள் குறித்த வயல் நிகழ்ச்சி வேளாண் இணை இயக்குனர் தனபாலன் தலைமையில் நடந்தது.
உதவி இயக்குனர் ஷர்மிளா, தோட்டக்கலை உதவி இயக்குனர் சண்முகநதி, பொறியியல் துறை ஷேக் ஆசிப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டம், தரிசு நில மேம்பாடு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய அபிராமி மதிப்பு கூட்டல் முறை மூலம் லாபம் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர் சத்யா, உதவி மேலாளர்கள் சண்முகபிரியா, நந்தினி செய்திருந்தனர்.

