/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நகராட்சி கடைக்கு ஏலம் நடக்காததால் நிதி இழப்பு
/
சிவகங்கை நகராட்சி கடைக்கு ஏலம் நடக்காததால் நிதி இழப்பு
சிவகங்கை நகராட்சி கடைக்கு ஏலம் நடக்காததால் நிதி இழப்பு
சிவகங்கை நகராட்சி கடைக்கு ஏலம் நடக்காததால் நிதி இழப்பு
ADDED : மார் 31, 2025 06:27 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் தினசரி சந்தை ஏலம் வைப்பு தொகை அதிகம் என்பதால் கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாலும், ஏலம் மூன்று முறைக்கு மேல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஏலம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிவகங்கை தினசரி சந்தையில் ரூ.3.49 கோடியில் 90 கடைகள் கட்டினர்.
பிப்., 6 மற்றும் 18, மார்ச் 5 ஆகிய மூன்று நாட்கள் ஏலம் விட முடிவு செய்தனர்.
கடைக்கு டெபாசிட் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என கூறியதால், வியாபாரிகள் பங்கேற்கவில்லை.
இதனால் டெபாசிட் தொகையை ரூ.50 ஆயிரமாக குறைத்தனர். அந்த ஏலத்திலும் வியாபாரிகள் பங்கேற்கவில்லை.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கட்டிய 18 கடைகளும் ஏலம் விடப்படாமல் கிடப்பில் போட்டுள்ளதால், நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.