/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம்
/
இளையான்குடி ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம்
ADDED : செப் 25, 2025 05:04 AM
இளையான்குடி : இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பை மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. தாலுகா,கோர்ட், சார்நிலை கருவூலம், மின்வாரிய அலுவலகங்களுக்கு செல்லும் ரோட்டின் ஓரங்களில் குப்பை, இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இளையான்குடி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை கூறியதாவது: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி ஒரு சிலர் இறைச்சிக்காக மாடுகளை வெட்டி விற்பனை செய்து அதன் கழிவுகளை குப்பை கிடங்கிற்கு செல்லும் ரோட்டின் ஓரங்களில் கொட்டி செல்கின்றனர். இதே போன்று ஆடு, கோழி கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இனிமேல் அப்பகுதியில் குப்பை, கழிவுகளை கொட்டக்கூடாது என்று கூறியுள்ளோம். தொடர்ந்து கொட்டினால் அவர்களுக்கு அபராதம் விதித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.