/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி அருகே குப்பை கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
/
இளையான்குடி அருகே குப்பை கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
இளையான்குடி அருகே குப்பை கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
இளையான்குடி அருகே குப்பை கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 25, 2025 05:04 AM

இளையான்குடி : இளையான்குடி கீழாயூர் காலனி அருகே குப்பை கிடங்கு அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்த போது வாக்குவாதம் ஏற்பட்டது.
இளையான்குடி கீழாயூர் காலனி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட், வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளி என பல்வேறு அரசு திட்டங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது இளையான்குடி பேரூராட்சி குப்பை கிடங்கு இப்பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் கீழாயூர் காலனி, பசுமை நகர், பர்மா தமிழர் காலனி மக்கள் இங்கு குப்பை கிடங்கு அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நேற்று இளையான்குடி தாலுகா அலுவலகத்திற்கு வந்த கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, இளையான்குடி தாசில்தார் முருகன் பேரூராட்சி செயல் அலுவலர் அன்னலட்சுமி, துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை ஆகியோரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் பொது மக்கள் குப்பை கிடங்கு அமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது என மனு கொடுத்தனர்.
குப்பை கிடங்கு அப்பகுதியில் அமைப்பதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சிலர் மிரட்டியதால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.