
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் வினோத் குமார் என்பவருக்கு சொந்தமான அலைபேசி கடை உள்ளது. நேற்று காலை, கடையில் வேலை செய்யும் பெண் ஊழியர் பிரியா கடையைத் திறந்து மெயின் சுவிட்சை ஆன் செய்துள்ளார். திடீரென்று, மின்சாதன பொருட்கள் வெடித்து தீப்பிடித்தது. இதில் ஊழியர் பிரியா காயம் அடைந்ததோடு, கடையை விட்டு வெளியேறினார்.
கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். காயமடைந்த பெண் ஊழியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.