ADDED : ஜூன் 15, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்தூரில் மரப்பட்டறையில் இரவில் தீப்பற்றியதால், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
திருப்புத்தூர் தென்மாப்பட்டு ராஜா . இவர் அங்கு மரப்பட்டறை, மர இழைப்பகம் நடத்தி வருகிறார். ஏழு நாட்களாக வெளியூர் சென்றதால் பட்டறை மூடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு பட்டறையில் இருந்த மரங்கள் எரிந்து தீ, கரும்புகை எழுந்தது. பக்கத்து வீட்டிற்கும் பரவத் துவங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை 9:00 மணிக்கு தீயை அணைத்தனர்.