/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் கோடு போடும் இயந்திரத்தில் தீ
/
ரோட்டில் கோடு போடும் இயந்திரத்தில் தீ
ADDED : ஜூலை 24, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம் கே.வைரவன்பட்டியில் இணைப்புச்சாலை புதிதாக போடப்பட்டுள்ளது.
அதில் இயந்திரம் மூலம் இரு புறமும் கோடு போடுகின்றனர். நேற்று மாலை கே.வைரவன்பட்டி விலக்கு ரோட்டில் இயந்திரத்தை இயக்க ஆப்பரேட்டர் சிராஜ்தீன் சுவிட்சை போட்டபோது தீப்பொறி எழுந்து இயந்திரத்திலிருந்த காஸ் சிலிண்டரில் தீப்பிடித்து எரியத் துவங்கியது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.