/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பங்குனி விழாவிற்கு அக்னி சட்டிகள்...:மானாமதுரையில் அனல் பறக்கும் விற்பனை

ADDED : மார் 10, 2025 05:00 AM

தமிழகத்தில் தற்போது நடைபெறும் மாசி மற்றும் அடுத்து வரவுள்ள பங்குனி மாதங்களில் திண்டுக்கல், நத்தம், புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, தாயமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் விழா நடைபெறும்.
இவ்விழாவின் போது ஏராளமான பக்தர்கள் கோயிலில் பால்குடம், அக்னி சட்டிகள் எடுத்து நேர்த்தி செலுத்துவார்கள்.
'அனல்பறக்கும் அக்னிசட்டி விற்பனை'
இதற்காக மானாமதுரையில் அக்னி சட்டிகள் தயாரிப்பு பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதே நேரம் பங்குனி விழா தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே வியாபாரிகள் அக்னி சட்டிகள் வாங்க, மானாமதுரையில் குவிந்து வருவதால், இங்கு அனல் பறக்கும் விற்பனை நடைபெற்று வருகிறது.
இது குறித்து அக்னிசட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது, இங்கு 300 க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிற்கூடங்களில் 3 மாதங்களாக அக்னி சட்டிகள் தயாரித்து வருகிறோம். பக்தர்கள் நேர்த்திக்கடனாக அக்னி சட்டி எடுக்க, எங்களிடம் சட்டிகளை வாங்குவதால், நாங்களும் விரதம் இருந்து அக்னி சட்டிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ள, என்றனர்.