ADDED : அக் 12, 2025 04:36 AM

சிவகங்கை : சிவகங்கை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் மக்களுக்கு வாங்க கற்றுக்கொள்வோம், தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் தீ விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி தலைமை வகித்தார். சிறப்பு நிலைய அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.
தீயணைப்பு வீரர்கள் தீயினால் ஏற்படும் பாதிப்புகளில் எவ்வாறு தங்களை தற்காத்து கொள்வது என்பது குறித்தும், பல்வேறு வகையான தீ விபத்துகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கினர்.
மேலும் விபத்துகளை தடுப்பது, தீக்காயங்கள் ஏற்பட்டால் முதலுதவி செய்வது, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது போன்ற செயல்விளக்கங்களை அளித்தனர். பொதுமக்கள் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
* திருப்புத்துாரில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலகத்தில் சிறப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியன் தலைமையில் விழிப்புணர்வு ஒத்திகை மற்றும் செயல்பாடுகளின் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ,மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கு நிலையத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் தீ விபத்து ஒத்திகை நடத்தி விளக்கினர்.