/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிகாரிகள் வராததால் கிராம சபை கூட்டம் ஒத்தி வைத்து தீர்மானம்
/
அதிகாரிகள் வராததால் கிராம சபை கூட்டம் ஒத்தி வைத்து தீர்மானம்
அதிகாரிகள் வராததால் கிராம சபை கூட்டம் ஒத்தி வைத்து தீர்மானம்
அதிகாரிகள் வராததால் கிராம சபை கூட்டம் ஒத்தி வைத்து தீர்மானம்
ADDED : அக் 12, 2025 04:33 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டையில் அரசு அதிகாரிகள் வராததால் கிராம சபை கூட்டத்தை ஒத்திவைத்து கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
அலவாக்கோட்டை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மேல அம்மச்சிப்பட்டி, கீழ அம்மச்சிப்பட்டி, நடு அம்மச்சிபட்டி, அலவாக்கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரம்பாள், ஊராட்சி செயலர் கலைசெல்வி கலந்து கொண்டனர்.
கூட்டம் காலை 10:15 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு மருத்துவத்துறை, கால்நடை துறை, அஞ்சல்துறை உள்ளிட்ட 9 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். மற்ற 7 துறை அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். அனைத்து துறை அதிகாரிகளும் வந்தால் தான் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர். நீண்ட நேரமாகியும் மற்ற துறை அதிகாரிகள் வராததால் அனைத்து துறை அதிகாரிகளும் வந்தால் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும் என்றும், அடுத்தமுறை அனைத்து துறை அதிகாரிகளை வைத்து கூட்டம் நடத்திக்கொள்ளலாம். அதனால் இந்த கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்கவேண்டும் என்று ஒரு மனதாக முடிவெடுத்தனர். பின்னர் கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க கிராம மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம மக்கள் கூறுகையில், கிராம சபை கூட்டத்தில் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று எழுதி கொண்டு வந்தோம். ஆனால் கூட்டம் தொடங்கும் போது இரண்டே இரண்டு அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். மற்றவர்கள் வரவில்லை. அவர்களிடம் நாங்கள் எங்கள் குறைகளை கூறமுடியவில்லை. குடிநீர் பிரச்னையை பேச முடியவில்லை. கழிப்பறை கட்டடம் முறையாக பராமரிக்கவில்லை. பாசன கண்மாயில் குப்பை கொட்டப்படுகிறது. கிராம முழுவதும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கிராமத்திற்கு வைரல் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. பேசுவதற்கு கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வரவில்லை அதனால் கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றனர்.