/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை அருகே 3 லாரிகள் பறிமுதல்
/
மானாமதுரை அருகே 3 லாரிகள் பறிமுதல்
ADDED : அக் 12, 2025 04:27 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே வேதியரேந்தல், கோச்சடை,தெ.புதுக்கோட்டை, பூக்குளம், கல்குறிச்சி,கரிசல்குளம் உள்ளிட்ட வைகை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதிகளிலும் அதனை ஒட்டிய பட்டா நிலங்களிலும் தொடர்ந்து மணல் எடுக்கப்பட்டு வருவதாக மார்க்.கம்யூ., மற்றும் பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.
அக். 14-ம் தேதி மார்க்.கம்யூ., சார்பில் மணல் திருட்டை கண்டித்து மானாமதுரை தாலுகா அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.இதனை தொடர்ந்து மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் ஊழியர்கள் வைகை ஆற்றுப்பகுதிகளில் ரோந்து சென்ற போது பூக்குளம் பகுதியில் 3 லாரிகளில் மணலை அள்ளிக் கொண்டிருந்தவர்கள் வருவாய்த்துறையினரை பார்த்தவுடன் லாரிகளை விட்டுவிட்டு தப்பினர்.3 லாரிகளை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.வேதியரேந்தல் குரூப் வி.ஏ.ஓ., லட்சுமணன் புகாரில் மானாமதுரை போலீசார் 3 லாரிகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.