/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவிலில் தீயணைப்பு நிலையம்
/
காளையார்கோவிலில் தீயணைப்பு நிலையம்
ADDED : அக் 23, 2025 11:28 PM
சிவகங்கை: காளையார்கோவில் பகுதியில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காளையார்கோவிலைச் சுற்றியுள்ள 43 கிராம ஊராட்சிகளின் கீழ் 160க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தேசிய பஞ்சாலை, தனியார் கார்மென்ட்ஸ், திறந்தவெளி சிறை உள்ளது. காளையார்கோவிலின் எல்லை கிராமங்களுக்கும் சிவகங்கைக்கும் 40 கிலோ மீட்டருக்கும் மேல் துாரம் உள்ளது.
இந்த பகுதிகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை தடுக்க காளையார்கோவிலில் இருந்து 23கி.மீ., துாரமுள்ள சிவகங்கையில் இருந்து தான் தீயணைப்பு வீரர்கள் வரவேண்டும். அதற்குள் தீ பரவி விபத்து அதிகரிக்கும்.
எனவே காளையார்கோவில் பகுதியில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க காளையார்கோவிலை மையமாக வைத்து இங்கு தனியாக தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

