/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் தீயணைப்பு நிலையம் ரூ 2.37 கோடியில் புதிய கட்டடம்
/
திருப்புத்துாரில் தீயணைப்பு நிலையம் ரூ 2.37 கோடியில் புதிய கட்டடம்
திருப்புத்துாரில் தீயணைப்பு நிலையம் ரூ 2.37 கோடியில் புதிய கட்டடம்
திருப்புத்துாரில் தீயணைப்பு நிலையம் ரூ 2.37 கோடியில் புதிய கட்டடம்
ADDED : டிச 16, 2024 06:38 AM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் தீயணைப்பு நிலைய அலுவலகக் கட்டடத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். நிலையம் துவக்கி 40 ஆண்டுகளுக்கு பின் அலுவலக கட்டடம் கட்ட தீர்வானது.
திருப்புத்துாரில் தீயணைப்பு நிலைய அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சி மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் சிறிய அறையில் இயங்கி வந்தது.
பல முறை இடத் தேர்வு நடைபெற்று பல காரணங்களால் இறுதியாகவில்லை. தற்போது காட்டாம்பூர் ஊராட்சி செளமியநாரயணபுரத்தில் இடம் தேர்வானது. அதில் ரூ 2.37 கோடி மதிப்பில் தீயணைப்பு அலுவலகக் கட்டடம் கட்ட அனுமதியானது.
நேற்று கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஸ், உதவி மாவட்ட அலுவலர் செந்தில் குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல், பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி, ஊராட்சி தலைவர் கவிதா ராமச்சந்திரன், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஆனந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.