/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுவயலில் தீயணைப்பு நிலையம் திறப்பு
/
புதுவயலில் தீயணைப்பு நிலையம் திறப்பு
ADDED : ஜன 22, 2025 09:05 AM
காரைக்குடி : புதுவயலில் புதிய தீயணைப்பு நிலைய திறப்பு விழா நடந்தது.
புதுவயலில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். எம்.எல்,ஏ., மாங்குடி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
அதன் அடிப்படையில் புதுவயலில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கான பணி தாமதமான நிலையில், வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தனர். தாசில்தார் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

