ADDED : பிப் 16, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மெய்யப்பன்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: உஞ்சனையில் உஞ்சமாகாளியம்மன் கோயில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்டது. பிப்.,21 ல் கும்பாபி ேஷகம் நடக்கிறது. சிலர் முதல்மரியாதை உரிமை கோருகின்றனர். கலெக்டர், எஸ்.பி.,க்கு புகார் அனுப்பினேன். முதல்மரியாதை அளிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு கலெக்டர், எஸ்.பி., தேவகோட்டை தாசில்தார் அடுத்தவாரம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.