/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை அரசு மருத்துவமனையில் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
/
தேவகோட்டை அரசு மருத்துவமனையில் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
தேவகோட்டை அரசு மருத்துவமனையில் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
தேவகோட்டை அரசு மருத்துவமனையில் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
ADDED : நவ 18, 2025 04:06 AM
தேவகோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவைச் சேர்ந்த நெய்வயல் மடத்துனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கஸ்பார். 60.
இவர் எட்டு வருடங்களுக்கு முன்பு சைக்கிளில் செல்லும் போது விழுந்ததில் படுகாயமடைந்தார். இதில் கஸ்பாருக்கு இடுப்பு எலும்பு முறிந்து போனது. நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக அதிக வலியால் அவதிப்பட்டதை தொடர்ந்து தேவகோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
டாக்டர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
தலைமை டாக்டர் செங்கதிர், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் பிரசாந்த், மயக்கவியல் டாக்டர் சவுந்தர்யா உட்பட மருத்துவ குழுவினர் நேற்று கஸ்பாருக்கு மொத்த இடுப்பு எலும்பு மூட்டு (செட்டாக) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
மாற்று உறுப்பு எலும்பு பொருத்தப்பட்ட கஸ்பார் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.