ADDED : நவ 18, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை 48 காலனி நகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா நடந்தது.
நகராட்சி தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மரியசெல்வி வரவேற்றார்.
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் திட்டத்தின் கீழ் இப்பள்ளியில் படிக்கும் 74 மாணவர்கள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பராமரித்து வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

