/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுவயல் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
/
புதுவயல் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : நவ 18, 2025 04:06 AM

காரைக்குடி: புதுவயல் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவயல் பேரூராட்சி யில் உள்ள 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். நேற்று, கழிவுநீர் சுத்தி கரிப்பு தண்ணீரை தேரோடும் வீதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல ஆண்டு களாக பயணிகள் நிழற்குடை அமைக்காததை கண்டித்தும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் வீரசேகர உமையாம்பிகை கோயில் மற்றும் உய்யவந்த அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள், பள்ளி மாணவ மாணவிகள் இப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தற்போது பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டும் அதற்கான பணி நடை பெறவில்லை. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கோயில் அருகே அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்தப் பட்டது. தற்போது மீண்டும் பணி தொடங்கி உள்ளது.
தேரோடும் வீதி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக, மழை நீர் செல்லும் வரத்து கால்வாய்களில், கழிவு நீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டோம். உரிய நட வடிக்கை எடுக்கவில்லை என்றால் மறியலில் ஈடு படுவோம் என்றனர்.

