ADDED : மார் 18, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழச்சிவல்பட்டி: விராமதி பேய்கண்மாயில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராமத்தினர் ஆர்வமாக பங்கேற்றனர்.
இக்கண்மாயில் விவசாய தேவைக்கான தண்ணீர் பயன்பாடு முடிந்த நிலையில், கோடை வெயிலில் நீர் வற்றத்துவங்கியது. இதனையடுத்து கிராமத்தினர் சுற்று வட்டாரக் கிராமத்தினரை அழைத்து மீன்பிடி விழா நடத்தினர்.
பாரம்பரிய முறைப்படி ஊத்தா கூடை முறையில் அப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தினர் கண்மாயில் இறங்கி மீன்பிடித்தனர்.