நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : மதுராபுரி ஊராட்சி வேங்கைப்பட்டி வெட்டுக் கண்மாய் ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடை முடிவற்ற நிலையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.
நேற்று காலை 8:30 மணிக்கு ஆயக்கட்டுதாரர்கள் வெள்ளைத் துண்டு வீசி மீன்பிடித் திருவிழாவை துவக்கி வைத்தனர். மக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் பலருக்கும் கெண்டை, கெளுத்தி,விரால் என மீன்கள் கிடைத்தது.