ADDED : நவ 15, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை பரமக்குடி ரோட்டில் கோயிலுக்கு பின்புறம் மானாமதுரை போலீசார் ரோந்து சென்ற போது அப்பகுதியில் மறைந்திருந்த 5 பேர் போலீசை கண்டதும் தப்ப முயன்ற போது போலீசார் அவர்களை பிடித்தனர்.
விசாரணையில் முருகப் பாஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் பிரகாஷ்24, கண்ணன் மகன் மதன்குமார் 20, கணேசன் மகன் அஜித்குமார் 26, மற்றும் சிறுவர்கள் 2 பேர் உட்பட 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள்,மிளகாய் பொடி,இரும்பு பைப், கை உறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.