/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
/
திருப்புவனம் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
திருப்புவனம் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
திருப்புவனம் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
ADDED : மார் 22, 2025 05:00 AM

திருப்புவனம்: திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்புவனம் பகுதி மக்களின் காவல் தெய்வமான முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனியில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.
இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கொடிமரத்திற்கு சந்தனம், பால், பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்ட பின் பலிபீடத்துடன் சாமரம், சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட பின் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
கொடி மரத்திற்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாலை வழங்கினர். ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தன்னாயிரம் உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர். கொடியேற்றத்திற்கான பூஜைகளை செந்தில்பட்டர், விக்னேஷ் பட்டர், விவேக் பட்டர், ரமேஷ் பட்டர் செய்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள், 28ம் தேதி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது.