/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் கொடிக்கம்பம் அகற்றம்
/
காரைக்குடியில் கொடிக்கம்பம் அகற்றம்
ADDED : மே 16, 2025 03:18 AM
காரைக்குடி:காரைக்குடி மாநகராட்சியில், பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கட்சி மற்றும் கட்சி அமைப்பு சார்பிலான கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. காரைக்குடி மாநகராட்சியில் நேற்று, புது பஸ் ஸ்டாண்ட், முடியரசன் சாலை, செக்காலை, வைரவபுரம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும், கொடிக் கம்பங்களை அகற்றும் பணி நடந்தது.
தாசில்தார் ராஜா, டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.