/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீட்பு பணியில் நெகிழ வைத்த பங்களிப்பு
/
மீட்பு பணியில் நெகிழ வைத்த பங்களிப்பு
ADDED : டிச 11, 2024 07:00 AM
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் மூழ்கிய சிறுவர்களை மீட்க நடந்த மீட்புப்பணியில்பலரின் பங்களிப்பு நெகிழ வைத்தது.
திருக்கோஷ்டியூர் குளத்தில் டிச.8 ல் இரு சிறுவர்கள் மூழ்கினர். தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் இறங்கினர். சற்றும் எதிர்பாராமல் திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் செல்வராகவன், கோயில் பணியாளர் வேங்காடத்ரி, திருக்கோஷ்டியூர் மகேஷ், வைரவன்பட்டி சுப்பையா ஆகியோரும் மீட்புப்பணியில் இறங்கினர். தற்போது மீட்க நினைத்தாலும் பலருக்கும் நீச்சல் தெரியாததால் வேடிக்கை தான் பார்க்க முடிகிறது. தற்போதும் குளங்கள் உள்ளன. மழையால் நீரும் நிரம்பி விடுகின்றன. ஆனால் பெரும்பாலானோர் குளத்தில் குளிப்பதில்லை. இதனால் நீச்சல் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் எட்டாக்கனியாகி விட்டது. இதனால் நீரில் மூழ்கி பலியாவது தொடர்கிறது. மூழ்கியவர்களை காப்பாற்ற நினைப்பவர்களுக்கும் நீச்சல் தெரியவில்லை. இனியாவது நீச்சல் கற்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க அரசு முன்வர வேண்டியது அவசியமாகும்.

