/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்; பாலம் இல்லாததால் பரிதவித்த மக்கள்
/
ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்; பாலம் இல்லாததால் பரிதவித்த மக்கள்
ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்; பாலம் இல்லாததால் பரிதவித்த மக்கள்
ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்; பாலம் இல்லாததால் பரிதவித்த மக்கள்
ADDED : டிச 14, 2024 05:43 AM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள சுட்டி நெல்லிப்பட்டியில், பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் மக்கள் 10 கி.மீ., சுற்றிச்செல்லும் அவலம் நிலவுகிறது.
சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சாக்கவயல் ஊராட்சியில் சுட்டிநெல்லிப்பட்டி தச்சுப்பிலான்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. சுட்டி நெல்லிப்பட்டி அருகே சாயக்கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு, பள்ளத்துார் கண்மாய் பாலையூர் கண்மாயில் இருந்து தண்ணீர் வருகிறது. தொடர்ந்து இக்கண்மாயிலிருந்து தண்ணீர் மித்ராவயல் வரை செல்கிறது.
இக்கண்மாயில் இருந்து தண்ணீர் மித்ரா வயல் சாலையில் செல்கிறது. இச்சாலையில் மேம்பாலம் அமைக்கக்கோரி இப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைக் காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைகிறது. இதனால், கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்த முடியாமல் 10 கி.மீ., சுற்றிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இப்பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.