sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்ஸவம்

/

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்ஸவம்

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்ஸவம்

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்ஸவம்


ADDED : ஜூன் 12, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் பூப்பல்லக்கு உற்ஸவம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 5ல் திருக்கல்யாணம், 6 ல் கழுவன் திருவிழா, 9ல் தேரோட்டம் நடந்தது. ஜூன் 10ம் தேதி பூப்பல்லக்கு உற்ஸவம் நடந்தது. நள்ளிரவு 2:00 மணிக்கு மல்லிகை பூக்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பூரணை, புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் ஐயனார் எழுந்தருளினார்.

விநாயகர் வெள்ளி மூஞ்சிரு வாகனத்திலும், பிடாரி அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். அதிகாலை 4:00 மணிக்கு பூப்பல்லக்கு நான்கு ரத வீதிகளில் வலம் வந்து 5:00 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பல்லக்கில் சாத்தப்பட்டிருந்த மல்லிகை பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அடைக்கலம் காத்த நாட்டார்கள், கிராமத்தினர், தேவஸ்தானத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us