sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவக்கம்;   ஜூலை 11ல் சந்தனக்காப்பு அலங்காரம்  

/

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவக்கம்;   ஜூலை 11ல் சந்தனக்காப்பு அலங்காரம்  

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவக்கம்;   ஜூலை 11ல் சந்தனக்காப்பு அலங்காரம்  

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவக்கம்;   ஜூலை 11ல் சந்தனக்காப்பு அலங்காரம்  


ADDED : ஜூலை 05, 2025 12:43 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டுடன் பூச்சொரிதல் விழா நேற்று துவங்கியது.

ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் நேற்று காலை 9:15 முதல் 9:40 மணிக்குள் கொடியேற்றத்துடன் பூச்சொரிதல் விழா துவங்கியது. அம்மனுக்கு காப்பு கட்டி, சிறப்பு பூஜை செய்தனர்.

நேற்று மாலை 4:45 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து பூக்கரகம் எடுத்து ஊர்வலமாக பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வந்தனர்.

மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் சன்னதி முன் பூக்குழி இறங்கி நேர்த்தி செலுத்தினர். அம்மனுக்குசிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். ஜூலை 9ம் தேதி காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை, அதற்கு பின் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

ஜூலை 11 அன்று காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு பாலபிேஷகம், சகல அபிேஷகம்,நைவேத்தியம் நடைபெறும். சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்வார்.

நகரின் பல்வேறு வீதிகளில் இருந்து பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வந்து, அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்துவர்.






      Dinamalar
      Follow us