/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் இன்று பூச்சொரிதல் விழா
/
திருப்புத்துாரில் இன்று பூச்சொரிதல் விழா
ADDED : ஏப் 17, 2025 05:44 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. நாளை மாலை காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது.
இக்கோயிலில் மூலவர் அம்மனுக்கு இன்று காலை 9:00 மணி அளவில் அபிஷேக,ஆராதனை நடைபெறும். அலங்காரத்தில் அம்மனுக்கு பக்தர்கள் பூக்களை செலுத்தி வழிபாடு துவங்கும். பக்தர்கள் பூத்தட்டுக்களுடன் வந்து விடிய,விடிய பூக்களை அம்மனுக்கு செலுத்தி வழிபடுகின்றனர்.
அதிகாலையில் மூலவர் அம்மனுக்கு தீபாராதனையுடன் நிறைவடையும். நாளை மாலை 5:00 மணிக்கு மேல் இரவு 7:35 மணிக்குள் அம்மனுக்கு கொடியேற்றி, காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கும். அம்பாள் கோயில்குளத்தை வலம் வருவார். தினசரி இரவில் அம்பாள் புறப்பாடு நடைபெறும். ஏப்.22ல் பால்குடம் எடுத்தலும்,ஏப்.26 இரவில் அம்மன் ரத ஊர்வலமும், ஏப்.27 காலையில் தீர்த்தவாரி மஞ்சள்நீராட்டும், இரவில் திருக்குள தீபவழிபாடும் நடைபெறும்.