/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நம்பர் பிளேட் இல்லாமல் பறக்கும் டூவீலர்கள்
/
நம்பர் பிளேட் இல்லாமல் பறக்கும் டூவீலர்கள்
ADDED : டிச 01, 2024 11:53 PM
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட் இல்லாமல் ஓடும் டூவீலர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் ஹெச்.எஸ்.ஆர்.பி எனப்படும் நம்பர் பிளேட்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் வகை வாகனங்களை குறிக்கும் வண்ணம் குறியிடப்பட்ட நம்பர் பிளேட்டுகளுடன் மட்டுமே அனைத்து வாகனங்களும் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் நம்பர் பிளேட்டுகள் வருவதற்கு முன்பாகவே டூவீலர்களை ஓட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் புது வண்டி போல் காட்டிக் கொள்ளும் சிலரும் தங்களின் பழைய வண்டிகளின் நம்பர் பிளேட்டுகளை கழட்டி கொண்டு வாகனங்களை ஓட்டி வருகின்றனர். போலீசார் ஆங்காங்கே நின்று வாகனங்களின் நம்பரை போட்டோ எடுத்து அபராதம் விதிப்பதை தவிர்க்கும் பொருட்டும், போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இப்பகுதியில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நிலையில் கொள்ளையர்களும் இதே முறையை பின்பற்றி தப்பிக்கும் அபாயம் உள்ளது. எனவே நம்பர் பிளேட்டுகள் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.