ADDED : நவ 09, 2025 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை பால முருகன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் உணவு திருவிழா நடந்தது.
தலைமை ஆசிரியை ஆர்த்தி குமார் வர வேற்றார். ஆரோக்கிய பயிற்சியாளர் உமா சிவ குமார் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். சமைத்த உணவு, சமைக்காத உணவு, சரிவிகித உணவு ஆகிய தலைப்புகளில் உணவு செய்து காட்சிப்படுத்தியிருந்தனர். ஏற்பாட்டை ஆசிரியை கீர்த்தனா செய்திருந்தார்.
* சிவகங்கை சாய் பாலமந்திர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை கோமதி பாலா வரவேற்றார். உமா சிவகுமார் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். ஆசிரியை சரண்யா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

