/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை அணையில் இருந்து மதுரை பாசனத்திற்கு நீர் திறப்பு
/
வைகை அணையில் இருந்து மதுரை பாசனத்திற்கு நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து மதுரை பாசனத்திற்கு நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து மதுரை பாசனத்திற்கு நீர் திறப்பு
ADDED : நவ 09, 2025 03:03 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி வீதம் நேற்று ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வைகை பூர்வீக பாசனத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் உள்ள கண்மாய்களில் தேக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அக்.27 முதல் 31 வரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 624 மில்லியன் கன அடியும், நவ.2 முதல் நவ.7 வரை சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு 772 மில்லியன் கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. தற்போது மதுரை மாவட்ட பாசனத்திற்காக நேற்று காலை 10:00 மணிக்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நவ.13 வரை மொத்தம் 428 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்படும். மதியம் 12:00 மணிக்கு வைகை அணை நீர்மட்டம் 68.34 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). அணையிலிருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி, மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1746 கனஅடியாக இருந்தது.

