/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குட்டையை தேடும் வெளிநாட்டு பறவைகள்
/
குட்டையை தேடும் வெளிநாட்டு பறவைகள்
ADDED : பிப் 20, 2024 11:39 PM
சிங்கம்புணரி,- சிங்கம்புணரியில் நீர்நிலைகள் வற்றி வரும் நிலையில் சரணாலயத்திற்கு வந்த பறவைகள் நீர் குட்டைகளைத் தேடி அலைகின்றன.
இவ்வொன்றியத்தில் உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வந்த வெளிநாட்டு பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்துள்ளன.
சீசன் முடியும் தருவாயில் பல பறவைகள் இன்னும் சொந்த நாடுகளுக்கு திரும்பவில்லை. அவைகளுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இரை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு கிடக்கும் நிலையில் அப்பறவைகள் சிறிய குளம் குட்டைகளை தேடி அலைகின்றன.
பொதுவாக நீர் நிலைகளில் பெரிய மீன் உள்ளிட்ட இரைகளை பிடித்து தின்று வந்த பறவைகள் தற்போது இரை கிடைக்காமல் சிறிய புழு பூச்சிகளுக்காக வறண்ட குட்டைகளில் காத்துக் கிடக்கின்றன.
விவசாயிகள் சிலர் இப்பறவைகளுக்காக போர்வெல் தண்ணீரை குட்டை, வயல்களில் பாய்ச்சி நிரப்பி வருகின்றனர்.

