/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் வேலைக்காக குவியும் வெளி மாநிலத்தவர்கள்
/
சிங்கம்புணரியில் வேலைக்காக குவியும் வெளி மாநிலத்தவர்கள்
சிங்கம்புணரியில் வேலைக்காக குவியும் வெளி மாநிலத்தவர்கள்
சிங்கம்புணரியில் வேலைக்காக குவியும் வெளி மாநிலத்தவர்கள்
ADDED : ஏப் 27, 2025 07:23 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஏராளமான வெளி மாநிலத்தவர்கள் வேலை வாய்ப்புக்காக குவிகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரான சிங்கம்புணரியில் ஏராளமான கட்டுமான வேலைகள் நடைபெறுகின்றன.
வேலைக்கு உள்ளூரில் கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் பீகார் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏஜன்ட்கள் மூலம் வரவழைக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்தந்த கம்பெனி, தொழிற்கூட வளாகம் மற்றும் தெருக்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
வேலை கொடுப்பவர்கள் ஆதார் நகல்களை வாங்கிக் கொண்டாலும் அவை உண்மைதானா என்று அவர்களால் சரி பார்க்க முடிவதில்லை.
போலீசார் அவ்வப்போது புள்ளி விவரங்களை சேகரித்தாலும் அவர்கள் கொடுக்கும் ஆவணங்கள் உண்மைதானா என்று சோதிப்பதில்லை. பல தொழிலாளர்கள் வேலைக்கு வந்து சில மாதங்களில் திரும்பி விடுகின்றனர்.
அவர்களுக்குப் பிறகு வேறு ஒரு குரூப் வந்து வேலை செய்கின்றனர்.
தமிழகத்தில் சில இடங்களில் உள்ளாட்சி அமைப்பு, போலீசார் வெளி மாநில தொழிலாளர்களின் அடையாளங்களை கண்டு அவர்கள் பற்றிய விவரங்களை ஆவணப்படுத்தி வைத்துள்ளனர்.
ஆனால் சிங்கம்புணரி பகுதியில் முழு அளவில் அது போன்று அடையாளம் காணப்படவோ, ஆவணப்படுத்தப்படவோ இல்லை.
சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் பிற மாநிலத்தவர் தானா அல்லது வெளியே இருந்து யாரும் வந்து சட்ட விரோதமாக தங்கி இருக்கிறார்களா என்பதை ஆய்வு நடத்தி அவர்கள் பற்றிய முழு தகவல்களையும் பேரூராட்சி நிர்வாகமும், போலீசாரும் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும்.