ADDED : ஜூலை 30, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே மலையில் பற்றிய காட்டுத்தீ போராடி அணைக்கப்பட்டது.
இப்பேரூராட்சியை ஒட்டிய மதுரை மாவட்ட எல்லைப் பகுதியான மேல்மலையில் நேற்று காட்டுத்தீ பற்றியது. மலை உச்சியில் 500க்கும் மேற்பட்ட மரங்கள், செடிகள் தீயில் எரிந்து சாம்பலாயின. சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் மலையில் ஏறி தீயை அணைத்தனர். தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அடிவாரத்தில் உள்ள வீடுகள் தப்பின. இம்மலையில் கடந்தாண்டு காட்டுத்தீ பரவி அணைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் தீப்பற்றி உள்ளது.