/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள்
/
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள்
ADDED : டிச 06, 2024 05:39 AM

சிவகங்கை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்8ம் ஆண்டு நினைவு நாள் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அனுசரிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்., சிலை அருகே வைக்கப்பட்ட அவரின் படத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபி, சேவியர், சிவாஜி, மாவட்ட கவுன்சிலர் ராமசாமி, மாரிமுத்து, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் குழந்தை, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத்தலைவர் ராஜா, நகர் அவைத் தலைவர் பாண்டி, காஜா முகைதீன், மாரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி பேரூராட்சியில் நகரச் செயலாளர் நாகூர் மீரா தலைமையில் ஏராளமானோர் ஜெ. உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜா, ஜெகதீஸ்வரன், கோபி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* தேவகோட்டையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலுவலகத்திலும், தேவகோட்டை நகரஅ.தி.மு.க. சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் முன்னிலை வகித்தார். நகராட்சி துணை தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் கார்த்திகேயன், துரைராஜ், முத்துராமலிங்கம் பங்கேற்றனர்.