/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
/
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
ADDED : செப் 16, 2025 04:24 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமையில் ஊர்வலமாக வந்த அக்கட்சியினர் பஸ் ஸ்டாண்ட் முன் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கணேசன், பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் செந்தில், ஒன்றிய துணைச் செயலாளர் சேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன் பங்கேற்றனர். தொடர்ந்து அனைத்து ஓட்டுச் சாவடிகள் முன் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏரியூரில் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அண்ணாதுரை பிறந்த நாளை கொண்டாடி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருப்புத்துார்: தி.மு.க., சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர் சண்முக வடிவேல், நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அ.தி.மு.க., சார்பில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன், மாநில பாசறை துணைச் செயலாளர் பார்த்திபன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, நகர செயலர் இப்ராம்சா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ம.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன், மாவட்ட அவைத் தலைவர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், நகர செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.