/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சி செயலர் மீது தாக்குதல் முன்னாள் தலைவர் கைது
/
ஊராட்சி செயலர் மீது தாக்குதல் முன்னாள் தலைவர் கைது
ஊராட்சி செயலர் மீது தாக்குதல் முன்னாள் தலைவர் கைது
ஊராட்சி செயலர் மீது தாக்குதல் முன்னாள் தலைவர் கைது
ADDED : ஏப் 11, 2025 02:07 AM
திருப்பாச்சேத்தி:திருப்பாச்சேத்தி ஊராட்சி செயலரை அலுவலக வாசலில் வைத்தே தாக்கிய முன்னாள் தலைவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி ஊராட்சி முன்னாள் தலைவர் ராமு 57. இவர் பதவியில் இருந்த போது விஜயா 36, என்பவரை ஊராட்சி அலுவலக கணினி ஆப்பரேட்டராக நியமித்துள்ளார். ஊராட்சி தலைவர் பதவி காலம் முடிந்த நிலையில் விஜயாவையும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்துள்ளனர். இதற்கு ஊராட்சி செயலரான தவமணி 46, தான் காரணம் என கருதி அவருக்கு அடிக்கடி அலைபேசி மூலம் ராமு மிரட்டல் விடுத்துள்ளார்.
இருநாட்களுக்கு முன் விஜயாவையும் அழைத்து கொண்டு ஊராட்சி அலுவலகம் வந்த ராமு அங்கிருந்த தவமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தவமணி திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் இரவு ஊராட்சி அலுவலக வாசலில் ஊராட்சி செயலர்கள் போராட்டம் நடத்தினர். ராமுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.