ADDED : ஜூலை 31, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கையைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் பாஸ்கரன். 2016 எம்.எல்.ஏ., தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
தற்போது அ.தி.மு.க., அமைப்பு செயலாளராகவும், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். ஜூலை 27 காலை அவரது கிராமத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென மயங்கி விழுந்தார்.
மதுரை தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அவரது மகனான சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் கூறும்போது, அப்பாவிற்கு பேஸ்மேக்கர் வைக்கப்பட்டுள்ளது.
டாக்டர்கள் ஓய்வெடுக்க கூறியுள்ளனர், என்றார்.

