/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை தொகுதிக்கு மனு கொடுக்க மாஜி எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் ஆர்வம்
/
சிவகங்கை தொகுதிக்கு மனு கொடுக்க மாஜி எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் ஆர்வம்
சிவகங்கை தொகுதிக்கு மனு கொடுக்க மாஜி எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் ஆர்வம்
சிவகங்கை தொகுதிக்கு மனு கொடுக்க மாஜி எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் ஆர்வம்
ADDED : மார் 19, 2024 05:31 AM
தேவகோட்டை : தி.மு.க. காங்., இடையே ஒரு வழியாககூட்டணி ஏற்பட்டு நேற்று போட்டியிடும் தொகுதிகள் கூட்டணியில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதையஎம்.பி. கார்த்தி தனக்கு தான் சீட் என தேர்தலுக்கான பணிகளை செய்கிறார்.
இந்நிலையில் அவரது தந்தை சிதம்பரம் ராஜ்யசபா எம்.பி. யாக இருப்பதாலும், கார்த்தி மீது பல புகார்கள் காங். மேலிடத்திற்கு சென்றுள்ளதாலும், சிவகங்கை தொகுதியில் கார்த்தி எதிராக கோஷ்டி பூசல் இருப்பதாலும் கார்த்திக்கு சீட் மறுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் காரைக்குடி,சிங்கம்புணரி பகுதியில் தேர்தல் அலுவலகமேதிறந்து விட்டார். மேலிடம் சிக்னல் எதுவும் இல்லாமல் இதை சுதர்சனநாச்சியப்பன் செய்ய மாட்டார் என அவர் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
விருதுநகர் தொகுதி கூட்டணிக்கு செல்லும் சூழ்நிலை இருந்ததால் அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யும் சுதர்சன நாச்சியப்பனின் அண்ணன் மகனுமான மாணிக்கம்தாகூர் சிவகங்கை தொகுதி மாற திட்டமிட்டார்.
தற்போது விருதுநகரும் காங்.சுக்கு கிடைத்து விட்டது. மாணிக்கம் தாகூர் அங்கு போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஒரே குடும்பத்தில் இருவரா என கார்த்திக்கு சொல்லும் காரணத்தை சுதர்சன நாச்சியப்பனுக்கு சொல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே எதிர் கோஷ்டியான இத்தொகுதியைச் சேர்ந்த மாநில காங்.ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமிக்கு கொடுக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பணம் கட்டி சீட் கேட்க தயாராகி வருகின்றனர்.

